Description
ஜி.யெஸ், ஒரு ப்ரிலான்ஸ் போட்டோகிராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு நாள் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு கல்யாணம் வரை பேசிக்கொள்கிறார்கள். கல்யாணத்துக்குத் தடையாக அருணாவின் வாழ்க்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. உடனடியாக அதைக் களைந்து விட்டு விருவதாகச் சொல்லிச் செல்கிறாள் அருணா. ஜி.யெஸ் காத்திருக்கிறான். அருணா வராததால் அவளைத் தேடித் செல்கிறான். எதிர்பாராத அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது.