Description
தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திவேதங்களிலும் மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது? நதி மூலத்தை ஆராயாதே என்னும் மூதோர் அறிவுரையைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு ஆராயத்தொடங்கினால், அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றை நம்மால் கண்டடையமுடியும்.19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய்தபோது, நம் நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்த காலமும் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகமே; சரஸ்வதியின் கரையில் உருவான இந்த நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதிக் கரையை நோக்கிச் சென்றது என்று நூதன புவியியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இன்று வறண்டு கிடக்கும் சரஸ்வதி நதியின் கரையில் நூற்றுக்கணக்கான ஹரப்பா குடியிருப்புகள் இருப்பது இந்த உண்மையை உறுதிப்படுத்தியிருக்கிறது.மறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் வரலாற்றை மிஷல் தனினோவின் இந்தப் புத்தகம் உயிர்ப்புடன் மீட்டெடுத்து தருகிறது. பல்வேறு துறைகளில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகரமான விவாதத்தை முன்னெடுக்கிறது இந்தப் புத்தகம்.