Description
தமிழில்: எஸ்.கிருஷ்ணன்இந்தியாவின் சர்வதேச வணிகத் தொடர்புகளுக்கு தமிழக வர்த்தகர்கள் எப்படி முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஆதாரபூர்வமாக இதில் ஆராயப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஆரம்பித்து சோழப் பேரரசு முடிவுக்கு வருவது வரையிலான பழங்காலத் தமிழகத்தில் நடைபெற்ற உள் நாட்டு வணிகம் மற்றும் கடல் கடந்த வணிகம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகம், தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.· பழங்காலத்தில் வணிகர்களும் வர்த்தகமும் எப்படி இருந்தன?· பண்டைத் தமிழ் மன்னர்கள் வணிகத்துக்கு எந்தெந்தவகையில் உதவினர்?· அயல் நாட்டு வணிகம் அவர்களுடைய ஆட்சியில் எப்படி இருந்தது?· கோவில் கலாசாரம் வணிகத்துக்கு எப்படி உதவியாக இருந்தது?· சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது?என்பவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.நூலாசிரியர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆரம்பகால காலனிய தமிழகம் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு நூல்கள் எழுதியிருக்கிறார்.