கொடூரக் கொலை வழக்குகள்


Author: வைதேகி பாலாஜி

Pages: 144

Year: 2017

Price:
Sale priceRs. 190.00

Description

ஆட்டோ சங்கர், பூலான் தேவி, அஜ்மல் கசாப், வீரப்பன், நொய்டா படுகொலை போன்ற ஒட்டுமொத்த இந்தியாவையும் பதைபதைக்க வைத்த கொடூரமான கொலை வழக்குகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.நினைத்துப்பார்க்கவே அஞ்சும் கொலைபாதகக் குற்றங்களை இவர்களில் சிலர் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும் சிலர் இன்னதென்றே கண்டுபிடிக்க முடியாத காரணங்களுக்காகவும் கொன்றிருக்கிறார்கள்.ஒவ்வொரு வழக்கும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கைமுறை, பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? கிரிமினல்களைத் தண்டிப்பதன்மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது?இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகப் பரந்த அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அன்றைய பத்திரிகைகளில் சுடச்சுட அலசப்பட்டவை. பொதுவெளியில் அச்சத்துடன் விவாதிக்கப்பட்டவை. நூலாசிரியர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய பரபரப்பையும் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

You may also like

Recently viewed