நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி


Author: வினய் சீதாபதி

Pages: 456

Year: 2017

Price:
Sale priceRs. 550.00

Description

தமிழில்: ஜெ.ராம்கி ஓர் அரசியல் மேதையின் சொல்லப்படாத கதைசற்றும் எதிர்பாராதவிதமாக நரசிம்ம ராவ் 1991-ல் இந்தியாவின் பிரதமரானபோது பொருளாதார நெருக்கடியாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது. சொந்த நாட்டு மக்கள் அவரை விரும்பியிருக்கவில்லை; கட்சியினர் அவரை நம்பகமான தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. 10 ஜன்பத்தின் நிழலில் செயல்பட்டாகவேண்டியிருந்தது. இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் ராவ் இந்தியாவை மறுமலர்ச்சி அடையச் செய்தார். உலக அரங்கிலும் தலை நிமிரச் செய்தார். ராவ் போல் குறைந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைச் செய்தவர்கள் உலக அரங்கில் யாருமே இல்லை.இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சம கால அரசியல் தலைவர்கள், அதிகாரவர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அயலுறவுக் கொள்கை, பாபர் மசூதி பற்றிய புதிய தகவல்களை முன்வைக்கிறது.தெலங்கானாவில் ஒரு குக்கிராமத்தில் ஆரம்பிக்கும் ராவின் இளமைப்பருவம், அரசியலில் செல்வாக்குடன் இருந்த காலம், ஓரங்கட்டப்பட்ட காலம் என அனைத்தையும் விவரிக்கும் இந்த நூல் ராவின் ஆளுமையையும், நெருக்கடி நிரம்பிய சிறு வயது நாட்களையும், அவர் செய்த ஊழல்களையும், அவருடைய காதல் அனுபவங்களையும், வாழ்நாள் முழுவதும் அவர் அனுபவித்த தனிமையையும் உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கிறது.இது மறக்கடிக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் ஆளுமையின் கதை மட்டுமல்ல; நவீன இந்திய மறுமலர்ச்சியின் வரலாறும் கூட.***"மேதைமையும் தீர்க்க தரிசனமும் மிக்க ஒரு பிரதமரின் அபாரமான வாழ்க்கை வரலாறு. காலம் நரசிம்ம ராவ் மீது கருணைகாட்டவில்லை. வினய் சீதாபதி அவரை உயிர்த்தெழச் செய்திருக்கிறார்."- கே.நட்வர் சிங்***"இந்தியச் சந்தையை உலகுக்குத் திறந்துவிட்டதில் முக்கிய பங்காற்றியவர் என்ற போதிலும் நரசிம்ம ராவ் ஒருவகையில் புரிந்துகொள்ள முடியாதவராகவும் உரிய மரியாதை தரப்படாதவராகவுமே இருக்கிறார். நவீன இந்திய வரலாற்றில் நரசிம்ம ராவ் வகித்த இடம் என்ன, அவருடைய தாக்கம் எப்படிப்பட்டது என்பதைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்நூல். ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து, முக்கியமான பலரைச் சந்தித்து உரையாடி வினய் சீதாபதி உருவாக்கியிருக்கும் இந்நூல் மறக்கடிக்கப்பட்ட ஓர் ஆளுமையைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஓர் அரசியல்வாதியாக, அறிஞராக, குடும்பத் தலைவராக, நாட்டின் தலைவராக நரசிம்ம ராவ் பல பரிமாணங்களில் இதில் வெளிப்படுகிறார்."- ராமச்சந்திர குஹா***வினய் சீதாபதி: அரசியல் அறிஞரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளருமான வினய் சீதாபதி அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரியிலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்ற இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

You may also like

Recently viewed