Description
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சிலமொழி பெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ்’ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில் நிலைத்திருந்த ரீதியில் எழுதியது.