Description
டெக்னாலஜி பற்றி எழுதுவது சுலபம். ஆனால் புரியும் வகையில் எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. சுஜாதா அதை சர்வசாதாரணமாக சாத்தியப் படுத்தியிருக்கிறார்.கணினித் தமிழ் குறித்தும் தமிழ் இணையம் குறித்தும் அவருடைய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. காரணம், அவற்றில் பெரும்பாலானவை இன்று செயல்வடிவம் பெற்றுவிட்டன. இதுதான் சுஜாதாவின் பலம்.டெல்லி, நியூயார்க், கவிதை, சினிமா, இசை என்று ரசிகர்களின் உள்ளம் தொட்ட பல கட்டுரைகளின் அணிவகுப்பே இந்தப் புத்தகம்.