Description
கதைக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் கட்டுரையாளராக வெற்றிபெறுவதில்லை. சுஜாதாவுக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கும் சங்கதி இது. அதற்கான சாட்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.பல்லை உடைக்காத வார்த்தைகள். எளிமையான கட்டமைப்பு. இலகுவான நடை. அழகான பன்ச். சுஜாதா கட்டுரைகளின் அங்க அடையாளங்கள் இவை.அந்த வகையில் தமிழ், கம்ப்யூட்டர், இணையம், டெக்னாலஜி, அறிவியல், அரசியல், சினிமா, பயணம், விமரிசனம் என்று பல தலைப்புகளில் சுஜாதா நடத்திய கட்டுரை சாம்ராஜ்ஜியமே இந்தப் புத்தகம்!