சொல்வளர்காடு (வெண்முரசு நாவல்-11)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)


Author: ஜெயமோகன்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 1,900.00

Description

சொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல்.ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.728 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 58 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.

You may also like

Recently viewed