Author: S.L.V. மூர்த்தி

Pages: 196

Year: 2013

Price:
Sale priceRs. 200.00 Regular priceRs. 230.00

Description

இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஜப்பான், அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பலியானது. தாக்குதல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை எப்படி உயர்த்தினார்கள் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம். அணுகுண்டுத் தாக்குதல் மட்டுமின்றி, இயற்கையும் ஜப்பானை அதிகம் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானில் பூகம்பம் தினசரி நடக்கும் நிகழ்ச்சி. எரிமலைகளும் உண்டு. அடிக்கடி கடல் கொந்தளிக்கும், சுநாமி வரும். மலைப்பாங்கான நாடு. விவசாயம் செய்வது மிகவும் கடினமான காரியம். இத்தனை தடைகளையும் மீறி அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து, விவசாயம், பொருளாதாரம் என்று பல துறைகளில் முன்னணியில் இருக்கிறது ஜப்பான். தன்னம்பிக்கையுடன் ஜப்பானியர்கள் தம் தேசத்தை முன்னேற்றித் தாமும் முன்னேறிய கதை, நாம் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

You may also like

Recently viewed