Description
கற்பு ஒரு மாய்மாலம்; அது ஆணாதிக்கக் கண்டுபிடிப்பு என்பார் பெரியார். ஆகவே பெண்களெல்லாம் அவிழ்த்து விட்ட மாடுகளைப்போல் திரியலாம் என்பது அவர் கருத்து! ஆனால் ஆணையும் பிடித்துத் தொழுவத்தில் கட்டியவன் கம்பன்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் அரசியல்ரீதியாக வெள்ளைக்காரன் ஒட்டி, ஒட்டி உருவாக்கிய இந்தியா, தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதற்கு முதலாளித்துவத்தின் விரிந்த சந்தைத் தேவைதான் காரணம் என்பர். ஒருநாள் இந்த அரசியல் ஒருமை சிதைந்தாலும், இந்தியாவே இல்லாமல் போனாலும், இந்தியாவின் பண்பாட்டு ஒருமை சிதையாது. இந்தப் பண்பாட்டு நீட்சி இராமாயணம் வழங்கிய கொடை! - பழ. கருப்பையா