சே குவேரா வேண்டும் விடுதலை & புரட்சியாளர் ஆனது எப்படி? (Combo Offer)

Save 10%

Author: மருதன்

Pages: 344

Year: 2017

Price:
Sale priceRs. 325.00 Regular priceRs. 360.00

Description

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்? இவருடைய எதிரிகள் யார்? சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன்? இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்? ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.  

 

அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.

You may also like

Recently viewed