நேதாஜி மர்ம மரணம்

Save 11%

Author: ரமணன்

Pages: 175

Year: 2017

Price:
Sale priceRs. 200.00 Regular priceRs. 225.00

Description

நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை.இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் அவர் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்பினாரா? ஹிட்லருடனான அவர் சந்திப்பு எப்படி இருந்தது? முசோலினியிடம் என்ன பேசினார்? ஜப்பானுடன் அவர் நெருக்கமானது எப்படி? ரஷ்யாவோடு அவருக்கு இருந்த தொடர்பு எத்தகையது? காந்தியின் தலைமையை நிராகரித்துவிட்டுதான் ஆயுத வழியை அவர் தழுவிக்கொண்டாரா?‘சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டார்’ என்னும் அறிவிப்பு முதல்முதலில் செய்தித்தாளில் வெளிவந்த நாள் தொடங்கி இன்று வரையில் அவரை முன்னிறுத்தி நடைபெறும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ரமணனின் விரிவான தேடுதலும் விறுவிறுப்பான எழுத்தும் புத்தகத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.

You may also like

Recently viewed