Description
வாட் டிட் யு ஆஸ்க் அட் ஸ்கூல் டுடே? நூலின் நேர்த்தியான தமிழாக்கம் இந்த நூல். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கமலாவின் பார்வையில் இந்தியக் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் வெளிப்படுகின்றன. அதோடு அவை எவ்வாறெல்லாம் சீர் செய்யப் படலாம் என்பதற்கான அணுகுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.நம் குழந்தைகள் உண்மையில் எதையும் புரிந்து கற்பதில்லை. மனப்பாடம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இப்படி நடந்திருக்கலாம். உயிரோட்டமாக, அனுபவபூர்வமாக செய்து கற்பதற்கு உதவும் கற்பித்தல் முறையே நமக்குத் தேவை. நமது அணுகுமுறையில் என்ன தவறு இருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில் கூறலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் கற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான உளவியல் காரணங்களை மட்டும் அலசியிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.பதினோரு அத்தியாயங்களில் குழந்தைகளின் கல்வி தொடர்பான, வளர்ப்புமுறை தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறார் ஆசிரியர். இதுபோன்ற நூல்களை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், தமிழ் மொழிக்கேற்ப கருத்தகளை மறுஆக்கம் செய்திருந்தால் வாசிப்பதற்கு எளிமையாக இருந்திருக்கும். ஆசிரியர்களுக்கு எழுதப்பட்டதே இந்நூல் என்றாலும் பெற்றோர்களும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.