கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Save 10%

Author: போகன் சங்கர்

Pages: 200

Year: 2017

Price:
Sale priceRs. 180.00 Regular priceRs. 200.00

Description

உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது. போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாகவும், நம் இருளை நமக்கே அடையாளம் காட்டுபவையாகவும் அமைகின்றன. வெளிச்சம் சிலரை மீட்டெடுக்கிறது. சிலரைக் கூசச் செய்து சிதறடிக்கிறது. இந்தக் கதைகள் இந்த இரு தரப்பினரையும் பற்றியவை. உருக்குலைந்த உயிர்களையும் சிதைவுகளிலிருந்து மிண்டெழுந்த உடல்களையும் இந்தக் கதைகளில் நாம் சந்திக்கிறோம். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில், இருப்புக்கும் இறப்புக்கும் இடையில், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையில் உள்ள ஆயிரம் இடைவெளிகளை இந்தக் கதைகள் நமக்கு அறிமுகம் செய்கின்றன.

You may also like

Recently viewed