Description
“இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்... இந்துத்துவம் = இந்துமதம் மைனஸ் சாதிக் கொடுமைகள் ப்ளஸ் நவீன சமூக சேவைகள் ப்ளஸ் அந்நியமத அடிப்படை வாதங்களுக்கு எதிரான தற்காப்பு வன்முறைகள் என்ற இந்த சமன்பாட்டின் விரிவான விளக்கம், அதன் அவசியம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள்...ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த(இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, அதன் சாதனைகள், மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்...ஜாதிக்கட்டமைப்புக்கு மாற்றாகச் சொல்லப்படும் இந்து தேசியம், தமிழ் தேசியம், மத மாற்றம், நகர்மயமாக்கம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றின் நிறை குறைகள்...இந்து மதம், இந்துத்துவம், ஜாதி பற்றிய அவதூறுகளையும் தவறான புரிதல்களையும் போக்குவதற்கான ஓர் எளிய முயற்சி.”