Author: சரவணன் சந்திரன்

Pages: 160

Year: 2017

Price:
Sale priceRs. 180.00 Regular priceRs. 200.00

Description

மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரும்பி வருகிற பிள்ளைகளுக்கு அது வெள்ளாட்டுக் கறியைச் சமைத்து வைத்துக் காத்திருக்கிறது. தகப்பன் இடத்தில் இருக்கிற அது ஒருபோதும் தன் மைந்தர்களைக் கைவிடுவதில்லை. தவறி விழுந்து மீள்பவர்களை தாய்மடியாய் அது வாரி அணைத்துக் கொள்ளவும் செய்கிறது. மைதானத்தில் பிறந்து தவழ்ந்து உருளும் ஒரு பந்தின் கதை இது. இந்திய அணியில் இடம்பெறத் துடிக்கும் அத்தனை விளையாட்டு வீரர்களின் கதையும்தான் இது. அடர்த்தியான கரிசல் வாழ்க்கையின் வழியாக அந்தப் பந்தின் ஊசலாட்டங்களைக் காட்சிப்படுத்தும் இந்நாவல், கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சியாகத் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது.

You may also like

Recently viewed