Description
90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர்.ஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது.“பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.கல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகாநாழிகை, புதிய சொல் போன்ற இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.***அனோஜன் பாலகிருஷ்ணன்சொந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். வயது இருபத்தைந்து. முதலாவது சிறுகதைப் புத்தகம் ‘சதைகள்’ 2016ல் இலங்கையில் வெளியாகியிருந்தது. ‘பச்சை நரம்பு’ இவரது இரண்டாவது சிறுகதைப் புத்தகம்.