Description
நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி? இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.NLP என்பது என்ன?· ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.· எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது. எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.