Description
* இந்தியா ஓர் இயற்கை தேசமா, செயற்கைக் கட்டமைப்பா? காஷ்மீர் போராட்டம் பிரிவினை ஆகுமா? இந்திய கம்யூனிஸ்டுகள் இந்துத்துவர்களா? பெரியாரின் தமிழ்த் தேசியம் ஏன்? பார்ப்பனர்கள் தமிழர்களா? கன்னடர், தெலுங்கர் நாடாளலாமா? தமிழர்கள் வந்தேறிகளா?நீ முதலில் தமிழனா, மனிதனா?அறிவுஜீவிகளாக அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் எந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் கருத்துச் சொல்லத் தயங்குகிறார்களோ, பயப்படுகிறார்களோ அதற்கெல்லாம் நலங்கிள்ளியிடம் இருந்து கட்டுரைகள் பிறக்கும். அவை நேருக்கு நேர் நின்று பேசும். தனக்கு எதிரான கருத்துக்களை நெற்றியில் அடித்து வீழ்த்த முயற்சிக்கும். -ப. திருமாவேலன், ஆசிரியர், ஜூனியர் விகடன்.* நலங்கிள்ளி இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கத்தை வெளிப்படுத்திக் குற்றாய்வு செய்கிறவராக மட்டுமல்லாமல், நேர்வகையாகவே தமிழ்த் தேசியத்தின் சிறப்பைப் பறைசாற்றும் தமிழியச் சிந்தனையாளராகவும் இந்தப் புத்தகத்தில் வெளிப்படுகிறார்.-தோழர் தியாகு.* சமூக அக்கறையாளர்களும், திராவிட அரசியலாளர்களும், பொதுவுடைமையாளர்களும் ‘இந்தியம்’ என்ற ஆரிய பார்ப்பனிய உள்ளீட்டை உணராமல், இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுத்து இந்துத்துவ சேவை செய்யும் காலத்தில் தோழர் நலங்கிள்ளியின் இந்நூல் வெளிவருகிறது. அனைவரும் கைகொள்ளவேண்டிய கருத்துப் பெட்டகம்.-பேராசிரியர் த. செயராமன்.* இந்தியமும் சாதியமும் பிரிக்கமுடியாதவை. மறுதலையாக, தமிழ்த் தேசியமும் சாதிய விடுதலையும் பிரிக்கமுடியாதவை. நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம் இந்திய மறுப்பையும் தமிழ்த் தேசிய ஏற்பையும் அழுத்தமான, மறுக்கமுடியாத வாதங்களால் மெய்ப்பிக்கிறது.