Description
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது.