Yogi Orr Aanmiga Arasiyal/யோகி: ஓர் ஆன்மிக அரசியல்


Author: சாந்தணு குப்தா, தமிழில்: S G சூர்யா

Pages: 208

Year: 2019

Price:
Sale priceRs. 200.00

Description

தமிழில்: SG சூர்யா------------------------------ ஒரு துறவிக்கு ஏன் அரசியல் ஈடுபாடு? இதுதான் காவி உடை உடுத்திய யோகி ஆதித்யநாத் 2017-ல் உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் எழுப்பப்பட்ட கேள்வி. நரேந்திர மோதியின் இந்துத்துவ அரசு தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது; இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்கப் போகிறார்கள். உத்தரபிரதேசத்தில் பசுவைக் கும்பிடுகிறர்கள்... முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்... பட்டியல் சாதியினரை ஒடுக்குகிறார்கள்... மருத்துவமனைகளில் குழந்தைகள் இறக்கின்றன... இந்துத்துவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் கதி இதுதான் என்பதுதான் யோகி பற்றியும் அவருடையை ஆட்சி பற்றியும் எழுப்பப்படும் மாய பிம்பம். ஆனால், உண்மை நிலை என்ன? அஜய் பிஸ்த் என்ற எம்.எஸ்ஸி. பட்டதாரியை யோகி ஆதித்யநாத்தாக வளர்த்தெடுத்த கோரக் நாத் மடாலயம் எத்தனை நூற்றாண்டுகளாக சமூக சேவைகளிலும் சமூக நல்லிணக்கத்திலும் ஈடுபட்டுவந்திருக்கிறது? மன்னராட்சிக் கட்சிகள் நிறைந்த நம் தேசத்தில் ஐந்து முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்ய நாத் 20 ஆண்டுகளுக்கு மேலாக என்னவெல்லாம் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டுவந்திருக்கிறார்? முதலமைச்சரான பின்னர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்தபடி உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு அவர் முன்னெடுக்கும் நலத்திட்டங்கள் என்னென்ன என்பவை எல்லாம் வலுவான ஆதாரங்களுடன் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. 22 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம் 80 மக்களவைத் தொகுதிகளை கொண்டது. நாட்டின் பல பிரதமர்களை உருவாக்கிய அந்த மாநிலம் பிரதமர் நரேந்திர மோதிக்குப் பின் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ள ஒருவரையும் உருவாக்கியுள்ளது. கூச்ச சுபாவம் கொண்ட, மலைபகுதியில் வசித்த சிறுவன் நவீனக் கல்வி பெற்று, பின் சன்யாசம் பெற்று, சமூக சேவைகள் மூலம் அரசியலுக்கு வந்து, கட்சிக்கு உள்ளேயும் வெளியேவும் புரட்சிகரமான அரசியல்வாதியாக மாறி இன்று அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்ட முதல்வராக மாறிய வரலாறை இந்தப் புத்தகம் வெளிக்கொணர்ந்துள்ளது.

You may also like

Recently viewed