Description
''இல்லஸ்டிரேடட் விக்லி'', ''பிளிட்ஸ்'', ''டைம்ஸ் ஆஃப் இந்தியா'', ''தினமணி'', ''தினமலர்'', ''ஜூனியர் விகடன்'', ''நக்கீரன்'' போன்ற இதழ்கள் - நாளிதழ்களில் பணியாற்றிய உதயனின் 250-க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களின் தொகுப்பு. நரசிம்மராவ், சோனியாகாந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ் என்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் பாரபட்சமின்றி விமர்சிக்கின்றன உதயனின் கார்ட்டூன்கள். ''''சராசரித் தமிழன் என்கிற, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, கோபம் கொப்பளிக்கிற, கோபத்தை எங்கு காட்டுவது என்று அறியாத மக்களின் வெடிப்புற்ற சிந்தனைகளாக உதயனின் கார்ட்டூன்கள் மிளிர்ந்தன'''' என்கிறார் பிரபஞ்சன்.