மரணம் சொல்லப்படாத ரகசியங்கள்


Author: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Pages: 456

Year: 2021

Price:
Sale priceRs. 350.00

Description

மரணத்தைப் பற்றி அறியப்படாத, அவசியம் அறியவேண்டிய, மர்மமான, பிரமிக்க வைக்கும் ஏராளமான விஷயங்களை இங்கு பகிரங்கமாகவும், எளிமையாகவும் விளக்குகிறார் சத்குரு.

மரணத்தை ஆரம்பத்திலிருந்து நாம் முற்றிலும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோமா? நமக்கு நிகழப்போகும் பாதகமாக அதைத் தவறாக சித்தரித்து விட்டார்களோ? ஒருவேளை மரணம் பற்றிய விளம்பரங்கள் எல்லாம் போலியாக இருந்தால்? நாம் பிறவிக் கடலைக் கடந்து விடுபட வாய்ப்புகள் நிறைந்த வாயிலாக மரணம் அமைந்திடுமோ?

ஒன்றை உள்ளது உள்ளபடியே புரிந்து தெளிந்துவிட்டால் பயம் மறைந்துவிடுகிறது. புரியாத வரை மட்டுமே பயம், எதிர்ப்பு எல்லாம். தெளிவு கிடைத்தால் விடுதலையே!

ஆத்திகர், நாத்திகர், பக்தர், பகுத்தறிவாளர், ஆன்மீகத்தில் பழுத்தவர், ஆன்மீகமே அறியாதவர் என யாராக இருந்தாலும், எந்த பேதமும் இன்றி, ஒருநாள் இறக்கப்போகும் அனைவருக்குமான புத்தகம் இது.

You may also like

Recently viewed