Description
சவாரிராயபிள்ளை வம்சவரலாறு'' (1899) என்ற நூலும், ''சவாரிய பிள்ளை வரலாறு'' (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளியில் மறுபதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராய பிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (1983-1904), தமது பாட்டனார் மதுரேந்திரம் பிள்ளை (1766-1821), தந்தையார் மரிய சவரிராயன் (1801-1874) ஆகிய இருவரும் எழுதிவைத்திருந்த ஓலைச்சுவடிகள், தமது தாயாரிடம் கேட்டறிந்த செய்திகள், தமது முன்னோர்களுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று நிகழ்த்திய கள ஆய்வில் கிடைத்த செய்திகள் போன்றவற்றின் துணையுடன் இவ்விரு நூல்களையும் எழுதியுள்ளார்.இந்நூலின் பதிப்பாசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ்க் கிறித்தவம் தொடர்பான வரலாற்றாய்வில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்.