Description
மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.