Description
கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உடைமையாக இருந்தன என்பதையும், தமிழ் நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோயில் சபைகளே நடத்தி வந்தன என்பதையும் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம் தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ.வேல்சாமி தொடங்கிவைத்துள்ளார்.