Description
தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது.வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம்.தன் கணவர் மீது பேரன்பையும், பெருங்காதலையும் எழுத்தாக்கி உள்ளார் கமலா ராமசாமி. துவக்கத்தில் வெகுளித்தனமாக இருந்து நம் காலத்தின் மிக பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும், அமைதியான விந்தையை இயல்பாக பதிவு செய்த விதத்தில் நூல் நம் கவனத்தை கவர்கிறது.மொத்தம் 160 பக்கங்களுடன் நூல் வெளிவந்து இருக்கிறது.