Description
தமிழ் மக்கள் ஒவ்வொருவர் இல்லத்தின் அணிகலனாக ஒரு ரேடியோ பெட்டி, அதன் அருகில் 'வானொலி' இதழ் ஒன்று. இதுவே நாம் எதிர்நோக்கி நிற்கும் இலட்சியம்.
விக்டர் பரஞ்சோதி
முதல் இயக்குநர், சென்னை வானொலி நிலையம்
இந்நூலில் சென்னை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, பாண்டிச்சேரி அகில இந்திய வானொலி நிலையங்களின் வரலாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழியல் நிகழ்ச்சிக்களம் என்ற பகுதியில்...
கற்பித்தல் புலமையாளர்கள்
ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ., மு.வரதராசனார், அ.சீ.ரா., மயிலை சீனி வேங்கடசாமி, மா.ராசமாணிக்கனார், ந.சஞ்சீவி, க.நா.சு., அ.ச.ஞானசம்பந்தம், டி.ஐயம்பெருமாள் கோனார்,
ம.ப.பெரியசாமித்தூரன்
பெண் படைப்பாளுமைகள்
வை.மு.கோதைநாயகி அம்மாள், குஹப்ரியை, சௌந்தராகைலாசம் ராஜம் கிருஷ்ணன், சரஸ்வதி ராம்நாத்
நாடகவியல் ஆளுமைகள்
பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.சண்முகம், பி.எஸ். ராமையா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், உமாசந்திரன், சுகிசுப்ரமணியம், அகிலன், துறைவன், தி.ஜானகிராமன், கே.ஸி.தியாகராஜன்
கவிஞர்கள்
ச.து.சு.யோகி, கி.வா.ஜகந்நாதன், ந.பிச்சமூர்த்தி, எஸ்.டி.சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, திருலோக சீதாராம், தொ.மு.சிதம்பர ரகுநாதன், மு.கருணாநிதி, அழ. வள்ளியப்பா
புனைகதை எழுத்தாளுமைகள் கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, தி.ஜ.ரங்கநாதன், நாரண துரைக்கண்ணன், மீ.ப.சோமசுந்தரம்
இலக்கியப் பேருரையாளர்
கிருபானந்த வாரியார்
போன்றோரது வானொலி நிகழ்ச்சிப் பங்கேற்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது