Description
புதிதாக எழுத வருபவர்களும், புதிதாக வாசிக்கத்
தொடங்குபவர்களும் பெரும்பாலும் இணைய
வெளியிலிருந்துதான் தொடங்குகிறார்கள்.
அவர்களுக்கு தமிழ் இலக்கியத்துக்கு வளமான
பங்களிப்பு செய்த எழுத்தாளர்கள் பற்றித் தெரிய
வருவதே இல்லை என்று கூறிவிடலாம். தமிழ்
இலக்கிய வெளியில் புதுத் தடம் பதித்தவர்களைப்
பற்றி பயிலுவதற்கு இப்புத்தகம் பெரிதும் பயன்படும்.
கலைபடைப்பு வாழ்வின் சாரங்களை, உள்ளுறைகளை
உறிஞ்சிக்கொண்டு போதாமைகள் உருவாக்கும்
நெருக்கடிகளை ஆழ்ந்து பார்க்கிற பார்வைகளை
கண்டு சொல்கிறது. வாசகனை பாதிக்காத
எழுத்துகளை விமர்சனப்பூர்வமாக ஆராய்கிறது..
சு.வேணுகோபால் தமது விமர்சனபூர்வமான
வாசிப்பனுபவத்தை அமைதியாக, ஆராவாரமில்லாமல்
சொல்லிச் செல்கிறார். வாசிப்பவர்கள் யாவருக்கும்
இப்புத்தகம் புதிய வெளிச்சத்தைத்தரும் என்பதில்
சந்தேகமில்லை.