ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ்: நல்லிணக்கத்தின் நாயகர் வாழ்க்கை வரலாறு


Author: டாக்டர் சரத் ஹேபால்கர்|தமிழில்: டாக்டர் இரா.வன்னியராஜன்

Pages: 420

Year: 2020

Price:
Sale priceRs. 300.00

Description

* ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூன்றாவது சர்சங்கசாலக் ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் அவர்களின் வாழ்வும், வேட்கையும், சிந்தனையும், சொல்லும், செயலும் என அனைத்தும் சங்கமயமாகவே திகழ்ந்தன.
* டாக்டர் ஹெட்கேவாரின் வடிவமாகவே அவரது வாழ்க்கையும் அமைந்தது என்றால் அது மிகையாகாது. ‘தீண்டாமை பாவமில்லை என்றால் உலகில் வேறெதுவும் பாவமில்லை; தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அகற்றப்பட வேண்டும்’ என்ற அவரது முழக்கம் சங்கத்தின் மந்திரச் சொல்லாகவே அமைந்தது.
* சமுதாய நல்லிணக்கத்திற்கும் சமுதாய சமத்துவத்திற்கும் ஸ்ரீ தேவரஸ் அவர்கள் அளித்த பங்களிப்பு அளப்பரியது. அவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வது சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு மட்டுமன்றி சமூகப் ப்ரக்ஞையுள்ள, சமுதாய மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் உத்வேகம் தரக் கூடியதாகும்.
* டாக்டர் சரத் ஹேபால்கர் எழுதிய மராத்தி மொழி புத்தகத்தின் தமிழாக்கமான இந்த புத்தகத்தை மிக அற்புதமாக தனக்கே உரிய பாணியில் கருத்துச் செறிவுடனும், சொல் நயத்துடனும் மொழியாக்கம் செய்துள்ளார் நமது தக்ஷிண க்ஷேத்ர சங்கசாலக் மானனீய டாக்டர் வன்னியராஜன் அவர்கள்.
* சங்க வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக விளங்குவது ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு. இதனைப் புத்தகமாக வெளியிடுவதில் விஜயபாரதம் பிரசுரம் பேருவகையும், பெருமையும் கொள்கிறது.
* ‘ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் – நல்லிணக்கத்தின் நாயகர்- வாழ்க்கை வரலாறு’, இந்நூல் ஸ்வயம்சேவகர்களின் சங்க வாழ்க்கையில் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிச்சயம் திகழும் என்று நம்புகின்றோம்.

You may also like

Recently viewed