Description
ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல என்கிறார் ஹரன் பிரசன்னா. அரசியல் நோக்கத்தோடும் பல குறியீடுகளோடும் வெளிவரும் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது சரியான வாதமல்ல. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது.
இப்புத்தகத்தில் வரும் சில கட்டுரைகள், அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருப்பதைப் பார்க்கலாம். இது முக்கியமானது. ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களே இன்றையத் தேவை என்று இந்தப் புத்தகம் சொல்ல வரவில்லை. மாறாக, ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதுமான இரட்டை நிலைப்பாட்டைப் பற்றியே பேசுகிறது. இதுவே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.