நம் உணவே நமக்கு மருந்து


Author: Dr.சத்தியவாணி

Pages: 200

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

நமது பாரம்பரிய உணவுப் பண்பாட்டு நெறியில் இருந்து விலகுவதன் விளைவாகவே, நாம் பலவித நோய்களுக்கு ஆளாகி, நம் இயல்பான இயக்கத்தையே முடக்கிக் கொள்கிறோம். இந்நிலையில், அலோபதி மருத்துவத்தில் முதுநிலை பட்டம் (M.D.) பெற்ற டாக்டர் சத்தியவாணி, இன்றைய சுழலில் பரவி வரும் நோய்களை ஆராய்ந்து அவற்றுக்கான காரணங்கள், அவற்றைப் போக்குவதற்கான எளிய வழிமுறைகளைத் தாம் எழுதிய நூல்கள் மூலமாகவும், கேப்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழ் மக்களிடையே விளக்கிப் புகழ்பெற்றவர். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டும், இவரது நூல்களை வாசித்தும், நேரில் ஆலோசனை பெற்றும் ஏராளமானோர் பல நோய்களிலிருந்து விடுபட்டுள்ளனர். இத்தகைய ஆராய்ச்சியையும் நேரிடை மருத்துவத்தின் செறிவான அனுபவத்தையும் கொண்டு 'நம் உணவே நமக்கு மருந்து' என்னும் இந்நூலை எழுதியுள்ளார் டாக்டர் சத்தியவாணி. நோய்களும் தீர்வுகளும், பழங்கள், காய்கள், மூலிகைகள் எனப் பெருந்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில், வாசகர்கள் அவரவர் தேவைக்கேற்ப நோய்க்கான மருத்துவத்தை மிக எளிமையான முறையில் தமக்குத் தாமே செய்து கொள்ள முடியும். இந்த எளிமை தான் இந்நூலின் சிறப்பு!

You may also like

Recently viewed