Description
கவனமின்றி அல்லது போதுமான அளவுக்கு அக்கறையின்றி நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன வேலைகளால் நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?
நம் வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக் நம் சூழலை எப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? ஆளில்லா விவசாயத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தொழிலாளர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை நாம் அறிவோமா? செல்வம் ஒரு பக்கம் சேர்ந்துகொண்டே போகும்போது வறுமை ஏன் முடிவில்லாமல் அதிகரித்துக்கொண்டே போகிறது?
இயந்திரமயமாக்கலும் செயற்கை நுண்ணறிவும் நம் பிரச்னைகளைத் தீர்த்துவிடுமா? கம்ப்யூட்டர் நம் தலைவிதியை நல்லபடியாகத் திருத்தி எழுதிவிடுமா? தேசம் செழிப்படைய ஜிடிபியில் கவனம் செலுத்தினால் போதுமா?
நம் சிக்கல்கள் தீரவேண்டுமானால் முதலில் நம் சிக்கல்கள் என்னென்ன என்பதை நாம் சரியாக உணரவேண்டும். அப்போதுதான் நமக்கான தீர்வுகள் கிடைக்கும். சோம. வள்ளியப்பனின் இந்நூல் நம் எண்ணங்களையும் வாழ்வையும் சரியான திசையில் செலுத்துவதோடு வளமான ஒரு எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தையும் வகுத்து நம் கரங்களில் அளிக்கிறது.
சிந்தனை மாற்றத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் விதைகளைத் தூவும் முக்கியமான நூல்.