பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு


Author: SG Suryah

Pages: 328

Year: 2020

Price:
Sale priceRs. 300.00

Description

இந்தி பேசும் மாநிலங்களைத் தாண்டி பா.ஜ.கவுக்குச் செல்வாக்கு கிடையாது; அதுவும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்குச் செல்வாக்கு என்பது சாத்தியமே இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள். ஆனால் என்ன நடந்தது? அன்புத் தம்பி SG சூர்யா, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க எப்படி வலுப்பெற்றது, எப்படி மூன்றே வருடங்களில் ஒன்றுமில்லாத இடத்திலிருந்து ஒட்டுமொத்தப் பகுதியிலுமே தன் செல்வாக்கை அதிகப்படுத்தியது என்பதை மிக விரிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

- அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி மேற்கொண்ட உத்தி சார்ந்த தேர்தல் செயல்பாடுகள் பற்றி தமிழில் விரிவாக ஒரு புத்தகம் வருவது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேர்தல் செயல்பாட்டு முறைக்கும், வடகிழக்கில் பாரதிய ஜனதா கடைப்பிடித்த முறைக்குமான ஒப்பீட்டை மேற்கொள்ள ஒரு வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது இந்தப் புத்தகம். ஓட்டுக்கு நோட்டு கொடுக்காமலும், இலவசங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாமலும் வெற்றியைச் சாதித்திருப்பது ஒரு தமிழன் என்கிற முறையில் வியப்பை ஏற்படுத்துகிறது.

- கோலாகல ஸ்ரீநிவாஸ்

வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் ஏழு மாநிலங்களும் சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாகத் தனித்துவம் வாய்ந்தவை. மணிப்பூரில் சர்ச்சையில் ஈடுபடும் பழங்குடியினரை ஒருமித்த கருத்தில் ஒன்றிணைப்பதும் மத உணர்வுகளைச் சமநிலையுடன் கையாள்வதும் பா.ஜ.க-வின் முக்கியச் சவால்களாக இருந்தன. கிறித்துவ மதம் ஆதிக்கம் செலுத்துகிற பகுதியான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆட்சிக்கு வருவதன் பின்னிருக்கும் சவால்கள் குறித்தும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
திரிபுராவில் கம்யூனிசக் கட்சியின் நெருக்கடிகளை உடைத்தெறிந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த நிகழ்வு, இந்திய அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பக்கம் என்றே சொல்லவேண்டும்.

-அண்ணாமலை ஐபிஎஸ் (ஓய்வு).

SG சூர்யா கோவையில் பிறந்து பூ.ச.கோ கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மேலாண்மை படிப்பு முடித்து, பூனா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்தவர். இவரது தாத்தா மறைந்த பா.ஜ.க மூத்த தலைவர் திருக்கோவிலூர் சுந்தரத்தால் சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்க அறிமுகம் கிடைத்து, ஹிந்துத்துவா சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். 2012 குஜராத் தேர்தல் மற்றும் 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது இன்றைய பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையிலான சிறப்புத் தகவல் தொழில்நுட்பப் பிரசார யுக்தி குழுவில் இடம்பெற்றிருந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரசாரப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய இவர், இதுவரை பா.ஜ.க-விற்காக 10 சட்டமன்றத் தேர்தல்களில் பிரசார யுக்திகளைக் கையளித்துள்ளார்.

SG சூர்யாவின் பிற புத்தகங்கள்:

பாலம் கல்யாணசுந்தரம் (வாழ்க்கை வரலாறு)

வீர சாவர்க்கரின் அந்தமான் சிறை அனுபவங்கள் (மொழிபெயர்ப்பு)

யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு)

இந்திய இலங்கை அகதிகளின் நெருக்கடிகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்

You may also like

Recently viewed