ஆசிரியர் தொ.பரமசிவன் நூல்கள்


Author: தொ.பரமசிவன்

Pages: 450

Year: 2022

Price:
Sale priceRs. 370.00

Description

தெய்வங்களும் சமூக மரபுகளும்

 தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப.

தெய்வம் என்பதோர்

வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டவாறே சிதம்பரம் கோயிலை அணுக வேண்டும் .

தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் சிதம்பரம் கோயிலின் அர்த்தமண்டபத்தில் தமிழ்பாட ஒரு இயக்கம் நடத்தியதும் அவர் தோற்றுப்போனார் என்பதும் குறிப்பிடத் தகுந்தவை.
வ.சுப.மா தோற்றுப்போன பின்னர் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் மேடையில் தமிழில் பாடி வழிபட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார்.உயர் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது.தமிழக அரசும் அதனை ஏற்று ஆணை வெளியிட்டது.அவர் கோயிலுக்குள் சென்று தமிழில் பாடி வழிபாடு செய்தார் .கோயிலுக்கு பொன் வேய்ந்த மாமன்னர்களும் பெற முடியாத உரிமையினை சிவனடியார்கள் பெற்றனர் .வள்ளலாரின் கனவு நனவாயிற்று .

 

அறியப்படாத தமிழகம்

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

இந்து தேசியம்

நான் இந்துவல்ல நீங்கள்...? • சங்கர மடம் - தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள். • இந்து தேசியம். • இதுதான் பார்ப்பனியம். • புனா ஒப்பந்தம் ஒரு சோகக் கதை. >> இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரத கலாச்சாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்துவம் என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன. இப்படிப் பல பெயர்களில் வழங்கி வரும் இந்தச் சித்தாந்தத்தைத் தோலுரித்துப் பார்க்கவும், காட்டவும் நான் செய்த சிறு சிறு முயற்சிகளே இந்தக் குறுநூல்கள் ஆகும்.

You may also like

Recently viewed