Description
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.