Description
குருட்சர் சொனாட்டா' வெளியான காலத்தில், அதில் கூறப்பட்ட பாலியல் பற்றிய விவாதங்கள் காரணமாக அது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட இந்த நாவல், பாலியல் பற்றிய விவாதங்களோடு காதல், உணவு, உடல் உழைப்பு. மருத்துவம், இசை மற்றும் வறுமை ஆகிய பலவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. குறிப்பாகப் பெண்கள் ஆண்களின் உறவுக்கிடையே எழும் பொறாமை உணர்வை இந்நாவல் விரிவாக ஆய்வு செய்கிறது. பல வாசகர்கள் இதைப் படித்துத் திகைத்துப் போனார்கள்.
இந்தக் கதை என்னைத் தாக்கி எனக்கு எதிராக எழுதப்பட்டது என்று எனக்குத் தெரியும்' என்று டால்ஸ்டாயின் மனைவி சோபியா இந்நாவல் வெளியான போது சொன்னார். 'என்னைத் தவறாகச் சித்தரித்து உலகத்தின் பார்வையில் என்னை அவமானப்படுத்தி, எங்களுக்கிடையே இருந்த அன்பின் எச்சங்களை இது அழித்துவிட்டது' என்றார் அவர்.

