Description
குறுமுனி குடித்த கடலாய், குறுகத்தரித்த குறளாய் ஆழ்ந்த தத்துவங்களையும், உலகியல் பார்வைகளையும் உள்ளடக்கியிருக்கும் மிகச் சிறிய, செறிவான ஒரு நாவல் குட்டி இளவரசன். உலக நாவல் வரிசையில் சிறப்பான இடம்பெற்றிருக்கும் இப்படைப்பைக் குழந்தைகளுக்கானது என்று மட்டுமே தரம் பிரித்துவிட முடியாது.
எந்த வயதினரும். எந்தத் துறை சார்ந்தவரும் பெற்றுக்கொள்ள ஒரு செய்தியையாவது இந்நாவல் பொதிந்து வைத்திருக்கிறது. மேற்சொன்ன காரணத்தால்தான் இந்த நாவல் ஒரு அழுத்தமான செவ்விலக்கிய ஆக்கமாகக் காலம் பல கடந்தும் முன்நிற்கிறது.
- எம்.ஏ.சுசீலா

