Description
பிறவித்துன்பம் குறித்த வேதனையில் நீங்கள் இருக்கும் போது. நம் நெற்றியில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது' என்று எண்ணத் தோன்றும். ஆனால், உங்கள் நெற்றி வியர்வை அந்த எழுத்தைத் துடைத்துப் போட்டுவிடும் என்பேன் நான்.
செயலும், முயற்சியும் இல்லாவிடில் எல்லா அறிவும் வீண். செயலுடன் இணையும் போதே அறிவு அர்த்தமுடையதாகும். அறிவின் மதிப்பு அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிறது. விருப்பமின்றிச் செய்கிற வேலை வீண். அது பொருளற்றது.
நீங்கள் விருப்பமுடன் ஒன்றைச் செய்கிறபோது. உங்களை உங்களோடு மட்டுமின்றி கடவுளோடும் நீங்கள் பொருத்திக் கொண்டு விடுகிறீர்கள்.

