Description
வன்மை மென்மை என்ற இரு ஊற்றுக்கண்களிலிருந்து
எழுத வந்த எழுபதுகளின் இளைஞர்கள் தமிழ்ச்
சிறுகதைக்கு ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை
உருவாக்கித் தந்திருப்பவர்கள். கைவசமான
ஆக்கத்திறனை விடாது இயங்கியவர்கள். கைவிட்டு
திரும்ப பற்றி எழுந்தவர்கள். சரிந்தவர்கள் குறித்துப்
பேசுகின்றன இக்கட்டுரைகள்.
இலக்கிய நுண்ணுர்வு கொண்ட விமகர்கள்
எழுபதுகளின் இறுதியில் இப்புதிய எழுத்துப்பட்டாளங்கள்
மீது விரிவான ஆய்வை முன்வைத்திருந்தால்
அடுத்தடுத்த பத்தாண்டுகள் செறிவான - உக்கிரமான
சவாலான படைப்புக்களை இவர்களால் தந்திருக்க
முடியும். படைப்பாக்கம் சார்ந்த விமர்சனம் இப்படியான
நன்மைகளை விளைவித்திருக்கும். அது பெரியளவில்
நிகழவில்லை. இங்கு பேசப்பட்டுள்ள படைப்பாளிகளுக்கு
இக்கட்டுரைகள் எந்த அளவு உதவக்கூடும் என்று
சொல்ல முடியாது. புதிய படைப்பாளிகளுக்கும்
நுட்பமான வாசகர்களுக்கும் பயனளிக்கும் என்றே
நம்புகிறேன்.
சு. வேணுகோபால்