Description
எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் (Enemy of the Smuggler) என்ற நாவலை. தன் பணியில் கண்ட அனுபவங்களின் தொகுப்பாக கற்பனை நயம் கலந்து தந்திருக்கிறார் நாவலாசிரியர். துறைமுகம், விமான நிலையம் மற்றும் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக நடக்கும் கடத்தல் நிகழ்வுகளை. எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இந்த நாவல்ரெடுத்துரைக்கிறது. அரசு அதிகாரிகள் நாட்டுக்காக, உண்மையான கடமை உணர்ச்சியோடு பணிபுரிவதை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நாவல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது
இந்த நாவல், நாட்டு மேன்மைக்காகவும், குற்ற செயல் களுக்கு எதிராக அயராது உழைக்கும் சுங்க அதிகாரிகளின் பங்களிப்பை. அனைத்து தரப்பு மக்களுக்கும் விளக்கி சொல்லும் என்பதில் ஐயமில்லை. பல்வேறு கடத்தல்கள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பது பற்றி ஆய்வு செய்து விளக்குவதோடு. நாவல் மிகவும் விறுவிறுப்பாகவும், ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் அமைந்துள்ளது. எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் பகுதி 2 எப்பொழுது வெளியிடப்படும் என்ற ஆவல் என்னுள் எழுகிறது. நாவலாசிரியரும். எனது முன்னாள் மாணவருமான T. சமயமுரளி, I.R.S.. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!