Description
நிபந்தனையற்ற எழுத்தே கவிதையாகிறது. இந்த ஏதுமற்றவனின் எல்லாம்தான் இக்கவிதைகள். நான் கருவறையில் எழுதிய கவிதை நினைவில் இல்லை. ஆனால் அதைக் கொண்டாடிய என் பெற்றோர்கள் திரு சுரேஷ் மற்றும் திருமதி ரூபலதா இருவருக்கும் நன்றிகள். பதினெட்டு என் வயது. பொறியியல் என் படிப்பு. கவிதைகள் என் பிடிப்பு. இத்தனை ஆண்டுகளாக நான் கண்டறிந்த உயிரே இத்தொகுப்பின் கவிதைகள்,
இக்கவிதையுள் வாழ்வதைத் தவிர வேறேதுமறியேன். ஐம்பது கவியரங்குகளில் கவிதைகளை அரங்கேற்றியுள்ளேன். SRM தமிழ்ப்பேராயம் நடத்திய அனேக போட்டிகளில் முதல் பரிசும், லயோலா கல்லூரியின் தமிழ்த் துறை நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றிருக்கிறேன். இவற்றை மிஞ்சிய பரிசு என்பது இந்த நூல் உங்கள் கைகளில் இருப்பது தான்.