Description
திரு. சந்தானகிருஷ்ணன் அவர்களின் ஆகப்பெரும் உழைப்பின் ஆழத்தை, நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் நிழற்படங்களை பார்க்கையில் இன்னும் பெரிதாக விளங்கிக் கொள்கிறோம். நூலை படித்து முடிக்கையில் நம் உணர்வுகள் முழுக்க பத்மினி நிறைந்து நிற்கிறார். வாசித்து முடித்த சில நாட்களுக்கு, ஏதோ காரணத்திற்காக ஏதேனும் ஒரு தூணின் பின்னால் வாசித்தவர் நிற்க நேர்ந்தால், தூணின் மறு பக்கத்திலிருந்து பத்மினி அவர்களைப் பார்த்து கேட்பது போலவே தோன்றப் போகிறது. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.??'
-எஸ்.பி. முத்துராமன்
சினிமாவைக் கண்டுபிடித்தது லூமிர் சகோதரர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவிற்குள் கண்டுபிடிப்பதில் சந்தானகிருஷ்ணனுக்கு நிகர் இல்லை என்பது சத்தியம்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஆதாரங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நூல் திரைப்பட நடிகர்களை பற்றி இதுவரை வெளிவந்துள்ள நூல்களிலேயே வரலாறு படைத்ததாகும்
ஸ்டாலின்