Description
ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பதிவுகள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் ஏதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் இங்கே சொல்கின்றவை எல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புகளும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்றைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் வரலாற்றையும் உண்மைச் சம்பவங்களையும் முன்வைத்து, நினைவுகளைக் கிளறி எழுத்தாவணமாக்குவதை கடமையாக எண்ணுகிறேன்!. -கணேசன் (ஐயர்)