காவேரி நாடன்


Author: Mukilan

Pages: 272

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

முகிலன் அவர்களின் இயற்பெயர் மு . நாராயணன் என்பதாகும் . இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர் .

இவர் ஆத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் . திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் பயின்றவர் . 1978 முதல் 1979 ஆம் ஆண்டு நவம்பர் வரையில் ‘ அமுதசுரபி ' மாத இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் .

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள சிம்ஸன் நிறுவனத்தினர் நடத்தி வரும் ஸ்ரீபரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .

சுமார் 48 ஆண்டுகள் எழுத்துலகில் பயணித்து வரும் இவர் பல சரித்திர நாவல்களையும் , சமூக நாவல்களையும் எழுதியுள்ளார் . இவர் எழுதிய ' வைகியின் மைந்தன் ' சரித்திர நாவல் ' கலைமகள் ' நடத்திய நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்று , அவ்விதழில் தொடராகவும் வெளிவந்துள்ளது . இவர் எழுதிய ' சாளுக்கியன் சபதம் ' சரித்திர நாவல் அமுதசுரபியும் சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தாரும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளது .

சமூக , சரித்திர நாடகங்கள் பல அகிய இந்திய பல அகிய இந்திய வானொலி நிலையத்தின் ( திருநெல்வேலி ) மூலம் ஒலிபரப்பப்பட்டுள்ளன . மேலும் இவர் இயற்றமிழ் ரத்தினம் , தமிழ்ச் சான்றோர் , இலக்கிய மாமணி , சிறந்த படைப்பாளர் போன்ற விருதுகள் பல பெற்றவர் .

இவருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டி தமிழக அரசு 2020 ஆம் ஆண்டிற்கான ' தமிழ்ச் செம்மல் ' விருதினை வழங்கி இவரைக் கௌரவப்படுத்தியுள்ளது .

You may also like

Recently viewed