சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்


Author: கோ.சந்தனமாரியம்மாள்

Pages: 148

Year: 2023

Price:
Sale priceRs. 160.00

Description

தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களின் சமூக மனக்கோலங்களையும், நிலம் சார்ந்த பண்பாட்டுப் பின்புலங்களையும், சமூகச் செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் பேருதவி புரிகின்றது.

முனைவர் கோ.சந்தனமாரியம்மாள் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வையும் படைப்புகளையும் ஆழமாகவும் விரிவாகவும் விளக்கப்படுத்தியிருக்கிறது.

ஒரு படைப்பாளியின் எழுத்துலகிற்குள் பயணப்படுவதற்குப் பேருதவி செய்யும் வழித்துணை நூலாக இந்நூல் மிளிர்கிறது.

முனைவர் ஏர் மகாராசன்

You may also like

Recently viewed