Description
தமிழ் எழுத்தாளர்களில்
விட்டல் ராவைப் போல பல்துறைத் திறமைகள் கொண்டிருப்பவர்கள் அரிது. மிக நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள் பலவற்றை எழுதித் தடம் பதித்தவர் என்பதைத் தாண்டி, விட்டல் ராவ் ஒரு மிகச் சிறந்த நவீன, . Madras Artists, Sunday Painters குழுவில் இணைந்து செயலாற்றியவர். கர்நாடகாவின் நூற்றாண்டு பழமை மிக்க. 'குப்பி வீரண்ணா' நாடகக் குழுவில் அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு உண்டு ( 'வண்ண முகங்கள்' நாவலில் நாடகக் கலைஞர்களின் வாழ்வு நுட்பமாக சித்தரிக்கிறார்). நவீன ஓவியங்கள், ஓவியர்களின் வாழ்க்கை பற்றிய முதல் தமிழ் நாவல் ( 'கால்வெளி' ) அவர் எழுதியதுதான். ஓவியக்கலை குறித்து மட்டுமல்லாமல் அவரின் எழுத்துப் பரப்பு தமிழ்நாட்டு கோட்டைகள், சென்னை உள்ளிட்ட பல ஊர்களின் பழைய சரித்திரங்கள், அபூர்வமான இடங்கள், தி.ஜ.ர. குறித்த ஆய்வு என விரிந்திருக்கிறது.
இந்தத் தொகுப்பு விட்டல் ராவின் பன்முக ஆளுமையின் ஒரு சிறு பகுதிதான். அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் அளிக்கும் கௌரவம் என்பது கலைகள் செழித்தோங்கிய தமிழ் நிலப்பரப்பின் பண்பாட்டுக்கும், ரசனைக்கும் நாம் அளிக்கும் கௌரவம்.
-ஜி.குப்புசாமி