Description
என்ன பேசுவது ! எப்படிப் பேசுவது !!
என்ன பேசுவது ! எப்படிப் பேசுவது !! எதிர்காலத்தில் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், தகவல்தொடர்பியல், இதழியல், காட்சி ஊடகம், மேலாண்மையியல் போன்ற பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில்கிற மாணவர்களுக்குப் பாட நூலாக என்ன பேசுவது! எப்படிப் பேசுவது? என்ற நூல் விளங்கிடும். குறிப்பாக இந்த நூல், பேராசிரியர்களுக்கு வகுப்பறையில் சுவாரசியமாகப் பாடத்தை நடத்திடுவதற்குக் கையேடாக உதவும். தகவல்தொடர்பை முன்வைத்துக் காட்சி ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றிட முயலுகிறவர்கள். மேடைப்பேச்சில் வெற்றிகரமான பேச்சாளராக விரும்புகிறவர்கள். தகவல் பரிமாற்றத்தை மேலாண்மை செய்கிறவர்கள் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்படும். தகவல்தொடர்பை முன்வைத்து இறையன்பு விவரித்திடும் பன்முகத் தகவல்கள். கிராமப்புற மாணவர்கள் எதிர்காலப் போட்டிமிகு வாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை அடைந்திட அடிப்படையாக விளங்கும்.