Description
அந்தரங்கம் என்றொன்று இனி எவருக்கும் இல்லை. உலகெங்கிலும் அரசாங்கங்களும் பெரும் நிறுவனங்களும் பல்வேறு நோக்கங்களுக்காக மக்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
நாடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கலவரங்கள் திட்டமிடப்படுகின்றன. உளவு அமைப்புகள் அந்நிய நிலங்களில் ஊடுருவி தங்களுடைய ‘டார்கெட்டை’ அழிக்கிறார்கள். பெரிய நாடு, சிறிய நாடு என்று பேதமின்றிப் பெரும்பாலான நாடுகள் இத்தகைய அத்துமீறல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த அநியாயங்களை எல்லாம் யார் தட்டிக் கேட்பது?
சாமானியர்களாகிய நாம்தான் அதைச் செய்யவேண்டும் என்கிறது இந்நூல்.
எட்வர்ட் ஸ்நோடன், ஜூலியன் அசாஞ்சே போன்றவர்கள் எந்தப் பின்புலமும் இல்லாத சாமானியர்கள்தான் என்றாலும் அவர்களால் பலமிக்க அரசாங்கங்களின் குற்றங்களைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடிந்தது. மக்களை உளவு பார்க்க அரசாங்கங்கள் எந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனவோ அதே ஆயுதங்களைச் சாமானியர்களும் கையில் எடுக்கமுடியும் என்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
கண்களுக்குத் தெரியாத சக்திகளுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சாமானியர்களின் வரலாற்றை ஒரு திரில்லர் படம்போல் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் ரிஷிகேஷ் ராகவேந்திரன்.